மட்டக்களப்பில் உயிர் நீர்த்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

உரிமைப்போராட்டத்தில் உயிர் நீர்த்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு இன்று(27) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இந்த நிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் இன்றைய தினத்தில் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீர்த்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா உட்பட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

Latest Offers

Comments