மன்னார் ஆட்காட்டிவெளியில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

Report Print Ashik in சமூகம்

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் 'மாவீரர் தின நினைவேந்தல்' நிகழ்வு இன்று (27) மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் போது மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் உட்பட அனைவரும் உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் ஓய்ந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தினை கைப்பற்றிய இராணுவத்தினர், குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் காணப்பட்ட மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட அனைத்து கல்லறைகளையும் சேதப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் மிக உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது . இதேவேளை இந்நிகழ்வு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments