கிளிநொச்சியில் மாயமான கிராம அபிவிருத்தி சங்கம்! அதிருப்தியில் மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்
69Shares

கிளிநொச்சி மாவட்ட செல்வா நகர் கிராமத்திலுள்ள அபிவிருத்தி சங்கம் இயங்காமையால் மக்கள சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

நான்கு வருடங்களாக அக்கிராமத்தினைச் சேர்ந்த 840 குடும்பங்கள் சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்தாண்டு கடும் மழையிலும் இந்தாண்டு நிலவிய கடும் வறட்சியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பல அமைப்புக்களை தொடர்புகொண்டுள்ளனர்.

எனினும், செல்வாநகர் கிராம அபிவிருத்தி சங்கம் எங்கே? என்னும் கேள்வி மட்டுமே தமக்கு கிடைத்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் 212 பாலூட்டும் தாய்மாரும் 94 கர்ப்பவதிகளும் மற்றும் முதியவர்கள் சிறுவர்கள் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்வா நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தை மீள செயற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட புத்திஜீவிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments