வவுனியாவில் 'குடி' மக்களின் சாதனை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் கடந்த ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 507 லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

போத்தல் கள்ளு விற்பனை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளு விற்பனை ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் காலப்பகுதிகளில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஜனவரி தொடக்கம் செப்டம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 3 இலட்சத்து 59 ஆயிரத்து 926 லீற்றர் போத்தல் கள்ளு விற்பனையாகி உள்ளது.

இதுதவிர, உடன் கள்ளு கடந்த ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் 4 இலட்சத்து 81 ஆயிரத்து 581 லீற்றர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 507 லீற்றர் கள்ளு விற்பனையாகியிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் வவுனியாவில் 13 இலட்சத்து 28 ஆயிரத்து 505 லீற்றர் மதுபானம் விற்பனையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments