வவுனியா பெரியதம்பனை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதார நிலையமானது இன்று காலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராஜா, வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பவாணி பசுபதிப்பிள்ளை, செட்டிக்குளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுதர்சன், தாதி உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், அரச மற்றும் அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொலிஸார், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இப்பெரியதம்பனைக்குள் கிராம சேவையாளர் பிரிவின் கீழ் 130 குடும்பத்தினர் வசித்து வருகின்றதுடன், யுத்த காலத்தின் போது இடம்பெயர்ந்த இக்கிராம மக்கள் 2010ஆம் ஆண்டு மீள் குடியேறியமை குறிப்பிடத்தக்கது.