கிழக்கு மாகாண விவசாய அமைச்சரினால் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

Report Print Navoj in சமூகம்
47Shares

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியைச் சேர்ந்த மேகநாதன் மேதினி என்பவருக்கு கல்வி செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து நேற்று (07) அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கத்தின் தனிப்பட்ட நிதியுதவியின் மூலம் குறித்த துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் மற்றும் அலுவலக உத்தியோகஸ்தர்கள் மாணவியின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேபோன்று இளைஞர் யுவதிகளின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் சுயதொழில் செயற்பாடுகளுக்கு அமைச்சரினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments