வவுனியா தினச்சந்தைப் பகுதியில் ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு

Report Print Theesan in சமூகம்
67Shares

வவுனியா தினச்சந்தைப் பகுதியில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு இன்று(08) காலை 9.00 மணியளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வை உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே. இராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சுந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், தினச்சந்தை வியாபார நிலைய விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மூன்று நாட்களும் துக்க தினமாக பிரகடனப்படுத்தி வடக்கு மாகாண சபையினுடையக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தோம்.

செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு நாங்கள் செய்கின்ற கௌரவமாக வடக்கு மாகாண சபையினை கடந்த 06ஆம் திகதி ஒத்தி வைத்து நேற்றைய தினம் நடத்தியிருந்தோம்.

இதனை நாங்கள் அம்மாவிற்கு செய்கின்ற இதய அஞ்சலியாகவே கருதுகின்றோம்.

தங்களுடைய அரசியல் தேவைக்காக அரிசியல் இருப்பினை நிலை கொள்வதற்காக சில மாற்று முடிவுகளை எடுத்துக் கொண்டாலும் காலப்போக்கிலே ஈழத்தமிழர்களுக்காக தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தவர்.

அவர் இல்லாதது தமிழ் நாட்டு மக்களுக்கு அல்ல இலங்கையில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்குமான ஓர் இழப்பாகும்.

மேலும் அவருடைய இந்த இழப்பினை ஈடு செய்யக்கூடிய ஒரு தலைவர் இருப்பாரா? என்ற கேள்விகுறியுடன் எனது இதய அஞ்சலியினை நிறைவு செய்கின்றேன்.என வடமாகாண சபை உறுப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments