ஊழல் தொடர்பாக பேசும் டக்ளஸ் கடந்த காலத்தை மறந்துவிட்டார் போல!

Report Print Theesan in சமூகம்
156Shares

அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாக சுட்டிகாட்டிக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட அனைத்தையும் செய்தவர் என வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று கிராமிய சுகாதார நிலையம் ஒன்றினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாக பாராளுமன்றத்தினுடைய வரவு செலவுத்திட்டத்தில் ஊழல்கள் தொடர்பாக அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தினை டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவர் கடந்த காலங்களில் என்ன செய்தார் என எங்கள் எல்லோருக்கும் தெரியும். என்னென்ன ஊழல் செய்தார் எவ்வளவு நிதி வைத்திருந்தார், எத்தனை பேரை கொலை செய்தார், எத்தனை பேரை இல்லாமல் பண்ணினார் எல்லாம் படிப்படியாக வந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவுப்பகுதிக்குச் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த வேளையில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மேலும், பலரை பாரதூரமான காயங்களுக்கு உள்ளாக்கி இரண்டு பேரை அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருக்கு நேற்று யாழ். மேல் நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இரட்டை மரண தண்டனையும், இருபது வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கின்றதாக வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டார்.

Comments