வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(08) விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது.
சிறுவர் அபிவிருத்தி அமைப்பு மற்றும் யாழ்ப்பாணம் சிறுவர் மகிழ்ச்சி அகம் ஏற்பாட்டிலேயே மேற்படி வழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
“பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம்” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்வு, வவுனியாவின் பிரதேசசெயலகம், மத்திய பேருந்து தரிப்பிடம், மதகுவைத்த குளம் போன்ற பகுதிகளில் இடம்பெற்றது.
மேற்படி தொனிப் பொருளில் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இவ்வாறான வழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.