மாணவர்களுக்கு நாட்டின் மீதுள்ள பற்றை அதிகரிக்க செய்ய புதிய வேலைத்திட்டம்

Report Print Thiru in சமூகம்
23Shares

மாணவர்களை நாட்டின் மீது பற்று கொண்டவர்களாக மாற்றுவதற்று கல்வி அமைச்சுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபையின் இளைஞர் விவகாரங்களுக்கான வரவு செலவு திட்ட விவாதம் இன்று கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபை மண்டபத்தில் சபைத்தலைவர் நிமலசிறி தலைமையில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் இன்று நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் எங்களுடைய மாகாண சபைக்கு கடந்த வருடங்களை விட நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எமது நாடு பெரும் கடன் சுமையில் இருக்கின்றது. அதில் இருந்து நாம் மீண்டு வர வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.

குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்காக நாம் மனம் தளர வேண்டிய தேவை இல்லை.

எமது பெருந்தோட்ட பகுதிகளில் எத்தனையோ முரளிதரன்களும், ஜயசூரியாக்களும் ஒளிந்து கிடக்கின்றார்கள். அவர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு இந்த அமைச்சிற்கு இருக்கின்றது.

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்கின்ற எமது பெண்களுக்கு இங்கு தொழில்களை பெற்றுக் கொடுக்க முடியும்.

எமது பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அவர்களுடைய குடும்பங்கள் மிகவும் மோசமான நிலையை அடைகின்றன. பெருந்தோட்ட பகுதிகளிலும் கிராமிய நெசவு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுருத்தினார்.

மேலும், இளைஞர், யுவதிகளை முறையாக திட்டமிட்டு அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றாவிட்டால் தேவையற்ற பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் என ஆர்.ராஜாராம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments