புத்தசாசன அமைச்சின் செயலாளர்களில் ஒருவர் எனக் கூறி பதுளை பிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விகாரை ஒன்றின் விகாராதிபதியான பிக்கு ஒருவரிடம் கப்பம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விகாரையின் அபிவிருத்தி பணிகளுக்கு 50 இலட்சம் ரூபா பணத்தை பெற்று தருவதாக கூறி சந்தேகநபர் கப்பம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர், விகாராதிபதியான பிக்குவிடம் இருந்து 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபா கப்பமாக பெற்றுள்ளார்.