மொனராகலை நகரில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் காயமடைந்த மூன்று பேர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டி சாப்பிட சென்ற நபர், கொத்து ரொட்டியை தயாரித்து வழங்க காலதாமதமாகியதால் ஹோட்டலில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மொனராகலை பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இவர்கள் நாளைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.