மன்னாரில் சுய தொழிலாளர்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு

Report Print Ashik in சமூகம்
51Shares

மன்னாரில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இன்று (08) காலை கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு தொகுதி பயனாளிகளுக்கு தனது அலுவலகத்தில் வைத்து கோழிக் குஞ்சுகளை வழங்கி வைத்தார்.

வாழ்வாதார மேம்பாட்டிற்காக சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் போன்றோர் தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவைகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான என்.எம்.முனபர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.முஜாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments