யாழ் - தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் விலங்குகளால் கடியுண்டு 183 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 152 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர். நாய்க்கடிக்கு இலக்கானவர்களுக்கு விசர் நாய்க்கடித் தடுப்பூசி (ஏ.ஆர்.வி) ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் 29 பேர் பூனைக்கடிக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்றுள்ளதுடன், மற்றும் தலா ஒருவர் குரங்கு, எலிக்கடிக்கும் இலக்காகியுள்ளதாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.