தமிழ் - சிங்கள மாணவர்களுக்கிடையிலான மோதல் வழக்கு நிறைவு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
129Shares

யாழ்.பல்கலைக்கழக தமிழ் - சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 16ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ் - சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் உருவானது.

இந்த சம்பவம் தொடர்பில் சிங்கள மாணவர்கள் முறைப்பாடு கொடுத்ததன் அடிப்படையில் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள மாணவர்களுக்கு எதிராக முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.

குறித்த வழக்கு கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது.

கடந்த 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என கேட்டு கொண்டனர்.

இதேபோல் காயமடைந்த மாணவன் தமது முறைப்பாட்டினை மீள பெற்றுள்ளார். அதனை பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்றைய தி னம் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி சயந்தன் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது கோப்பாய் பொலிஸார் குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பு மாணவர்களும் தாம் செய்திருந்த முறைப்பாட்டை மீள கைவாங்கியதாக மேலதிக அறிக்கையை மன்றில் சமர்ப்பித்திருந்தனர்.

இதனடிப்படையில் குறித்த வழக்கானது முடிவுறுத்தப்படுவதாக நீதிவான் அறிவித்திருந்தார்.

Comments