கொடதெனியாவ சிறுமி சேயா சதோமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பாடசாலை மாணவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை
மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு பிரதம நிதியரசர் கே.ஸ்ரீ பவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(08) பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொடதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா சவ்தமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பில் முன்னதாக, பாடசாலை மாணவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.
மேலும் அவருக்கு குற்றத்துடன் தொடர்பில்லை என நிரூபிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.