விரைவில் நடைமுறைக்கு வரும் பிளாஸ்டிக் கூடைகள் சட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்
124Shares

எதிர்வரும் காலங்களில் மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் விவாகர அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவ்வாறான சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் அதனை அனைத்து விவசாயிகளும் ,வியாபாரிகள் சங்கமும் ஏற்றுக் கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ இல்லை.

எனினும் மரக்கறி மற்றும் பழங்களை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யும் போது மட்டுமே பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

மேலும் குறித்த சட்டத்தை விரைவில் செயற்படுத்தவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments