நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் இலவசமாக வழங்கப்பட்ட கைக்கணனிகளுக்கு பணம் செலுத்துமாறு விலைப்பட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இலவமாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டு ஊடகவயிலாளர்களுக்கு கைக்கணனிகள் வழங்கப்பட்டன.
தற்போது அந்தக் கைக்கணனிகளுக்கு மாதாந்த தவணைக் கட்டணத்தைச் செலுத்துமாறு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஊடகவியலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தனியார் தொலைபேசி நிறுவனமொன்றின் ஒத்துழைப்புடன் 60 நாடாளுமன்ற ஊடகவயிலளார்களுக்கு இலவசமாக கைக்கணனிகளை வழங்குவதற்கு ஊடக அமைச்சும் டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சும் நடவடிக்கை எடுத்திருந்தன.
நவீன தொழில்நுட்பத்துடன் ஊடகவியலாளாகள் முன்னோக்கி நகர வேண்டுமெனக் கூறி முதல் கட்டாக நாடாளுமன்ற ஊடகியலாளர்களுக்கும் இரண்டாம் கட்டமாக ஏனைய ஊடகவியலளார்களுக்கும் டெப்கள் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட நிகழ்வு ஒன்றும் நடாத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட கைக்கணனிகளுக்கான மாதாந்த தவணைக் கட்டணத்தை செலுத்துமாறு தற்போது ஊடகவயிலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்தம் 438 ரூபா என்ற அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கைக்கணனிகளுக்காக தவணைக் கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டணம் அறவீடு செய்யும் தனியார் தொலைபேசி நிறுவனம், சபாநாயகர், ஊடக அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொலைதொடர்பு உட்கட்டுமான வசதிகள் அமைச்சர் ஆகியோரையும் பிழையாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து அரசாங்கத் தரப்பில் இதுவரையில் கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.