பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வரும் நிலை குறித்து அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகியதனை தொடர்ந்து பலருக்கு மத்தியில் இந்த விடயம் அதிகம் பேசப்பட்ட ஒன்றாகியது.
இந்த நிலையில் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறித்த பெண்ணுக்கு அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.
அவருடைய பரிந்துரைக்கமைய அந்த அமைச்சின் தலைவர் பேராசிரியர் சானக அத்துகோரலவினால், அந்த பட்டதாரியான சாலிக்க நவோதனி பெர்ணான்டோவுக்கு தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் ஆய்வாளர் (III) தர பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவரது தொழிலுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு அண்மையில் அந்த அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
பல்கலையில் பட்டம் பெற்று மாடு மேய்க்கும் இலங்கைப் பெண்!