விபத்தில் 5 வயது சிறுமி பலி

Report Print Nivetha in சமூகம்
57Shares

கதிர்காமம் - புத்தளம் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிளில் விபத்தில் 5 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், 5 வயது சிறுமி உட்பட மேலும் ஒரு நபரும் காயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்த மற்றைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Comments