ஓய்வுக்கு பின்னரான மகிழ்ச்சியான வாழ்க்கை 'மகிழ்வோர் மன்றம்'

Report Print Thileepan Thileepan in சமூகம்
68Shares

வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தினால் மகிழ்வோர் மன்றம் ஓய்வுக்குப் பின்னரான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, வவுனியா பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9மணிக்கு மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் திரு. செ. ஸ்ரீநிவாஸன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா உதவிப் பிரதேசசெயலாளர் கர்ணன், கௌரவ விருந்தினராக வைத்திய கலாநிதி கந்தையா இராமச்சந்திரன், வவுனியா பிரதேசசெயலக கணக்காளர் ப.ஜெயபாஸ்கரன், தலைமைப்பீட சமூகசேவை உத்தியோகத்தர் வடமாகாணம் திரு. நா. இராஜமனோகரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ. நித்தியானந்தன், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் தனுசியா பாலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், சிறப்பு சொற்பொழிவு மகிழ்வுடன் வாழ்தல். உளநல வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சிவதாஸ் பங்குபற்றுனரது நகைச்சுவைப் பகிர்வு என்பன இடம்பெற்றது.

Comments