கடந்த ஒரு மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தௌஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஞானசார தேரரின் இஸ்லாம் மீதான விமர்சனத்துக்கு கடும் தொனியில் பதிலளித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அப்துல் ராசிக், கொழும்பு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஆரம்பத்தில் 14 நாட்கள் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்த அவருக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலை நீடித்து கடந்த மாதம் 25ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்று அவர் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, எந்தவொரு மதத்துக்கும் இழுக்கு ஏற்படும் வகையில் கருத்து வெளியிடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையுடன் அப்துல் ராசிக் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் மற்றும் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்து நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.