பிரபல செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் சிகப்பு அறிக்கையை பெற முடியாது என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
சந்தருவான் சேனாதீரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம் எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு எதிரான சர்வதேச பிடிவிராந்தை அமுல்படுத்துவதற்கு ஏதுவான காரணங்கள் எதுவும் இல்லை என சர்வதேச பொலிஸார் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கம்பஹா பதில் நீதவான் சந்திரிக்கா ஜயதேவி அமரசிங்க வழக்கு விசாரணைகளை ஏப்ரல் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.