மட்டக்களப்பில் இரு வீடுகள் உடைத்து துணிகரக்கொள்ளை

Report Print Reeron Reeron in சமூகம்
100Shares

மட்டக்களப்பு - திருமலை வீதியில் உள்ள இரண்டு வீடுகளில் நேற்று (8) இரவு கதவுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்றபோது கதவுகள் உடைக்கபட்ட நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, முதற் கட்ட விசாரணைகளில் இருந்து இரண்டு வீட்டு கதவுகளும் உடைத்து தங்க நகைகள் திருடப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments