வவுனியா பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் முறைப்பாட்டுப்பெட்டி

Report Print Theesan in சமூகம்
34Shares

வவுனியா பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் முறைப்பாட்டுப்பெட்டி ஒன்று செயலகத்தின் பிரதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முறைப்பாட்டுப்பெட்டி பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய வைக்கப்பபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிரதேச செயலகத்தினால் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்கள் உட்பட உத்தியோகஸ்தர்களின் செயற்பாடுகள், வவுனியா பிரதேசத்தின் குறைகள் தொடர்பாக பொதுமக்கள் முறையிடுவதற்கு முறைப்பாட்டுப்பெட்டி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் பொதுமக்கள் தமது குறைகளைத் தெரியப்படுத்துவதற்கு வசதியாகவே இம்முறைப்பாட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments