கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Report Print Nivetha in சமூகம்
69Shares

கடுவெல - வெலே பிரதேசத்தில் மர அறுவை ஆலையில் இரண்டு உழியர்களுக்கு இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஒன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்த நபரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இரு உழியர்களில் ஒருவர் கத்தியினால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை கடற்கரைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மரம்மொன்றில் தூக்கிட்ட நிலையில் நபரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்துள்ள நபரின் அடையாளம் இதுவரை அறியப்படவில்லை என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments