மன்னாரில் சமூக நல ஆர்வலர்களின் விசேட சந்திப்பு

Report Print Ashik in சமூகம்
23Shares

மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று(09) காலை விசேட ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு மாவட்ட சமூக நல ஆர்வலர்களின் ஏற்பாட்டில் பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் 'இலங்கையின் நிலைமாறு நீதியும் அதன் தோழ்வியும்' எனும் தொனிப்பொருளில் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மாவட்ட சமூக நல ஆர்வலர்கள், பிரஜைகள் குழுவின் பிரதி நிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு, பலன் தரும் பனை மரங்கள் அதிகாரிகளின் உதவியுடன் வெட்டப்படுதல், வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைக்கேடுகள், பாதிக்கப்பட்ட பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, சன்னார் குளம் சார்ந்த பகுதியை இராணுவத்தினர் சுவீகரித்துள்ளமை போன்று மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் படைத்தரப்பினராலும், அரச அதிகாரிகளினாலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளின் உதவியுடன் பாதிக்கப்படாத பண வசதி படைத்தவர்களுக்கு அரசின் உதவித்திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றமை தொடர்பிலும் தெளிவுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments