மட்டக்களப்பில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்தில் இன்று(09) காலை 9.00 மணியளவில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணியை இடம்பெற்றுள்ளது.

குறித்த விழிப்புணர்வு பேரணி கோரளைப் பற்று கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் வேள்ட்விஷன் நிறுவனம் இணைந்து நடாத்தியதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேரணி கிரான் சுற்றுவட்டத்தில் ஆரம்பித்து கோரக்கல்லிமடு ரெஜி கலாச்சார மண்டபத்தை அடைந்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பு வைத்திய அதிகாரி அனுஷா சிறிசங்கரால் விழிப்புணர்வு அறிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இலவச இரத்த பரிசோதனை நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

மேலும் பேரணியில் கிரான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அருணண், சுகாதார வைத்திய அதிகாரி ரி.ரவிச்சந்திரன், கிரான் பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ரி.விந்தியன் வேள்ட்விஷன் நிறுவன முகாமையாளர் கிந்து றோகாஸ், கோரளைப்பற்று கிரான் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் செல்வன் கே.தினேந்திரன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments