நடு வீதியில் அமர்ந்த பெண்.. வலுக்கட்டாயமாக தூக்கி வாகனத்தில் ஏற்றிய பொலிஸார்

Report Print Theesan in சமூகம்
1199Shares

வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியில் நடுவே அமர்ந்து பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த மூன்று ஆண்டுகளாக பழகிவந்த குறித்த பெண், பணம் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக இருவருக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதைஅடுத்து பணம்கொடுத்த பெண்ணுக்கும் பணம் வாங்கிய பெண்ணிற்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.


இறுதியில் இவர்களது சண்டையை தொடர்ந்து தாண்டிக்குளம் பிரதான வீதியின் நடுவே குறித்த பெண் அமர்ந்துள்ளார்.

பல மணி நேரங்கள் வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பெண்ணை பொலிஸார் அதிரடியாக கைது செய்தபோது வர மறுத்த பெண்னை வலுக்கட்டாயமாக தூக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

குறித்த பெண்ணை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு வவுனியா பொலிஸார் சுமார் ஒருமணிநேரம் தாமதமாகச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

வீதியில் அமர்ந்த பெண்ணினால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Comments