குப்பை கொட்டுவதற்கு தமிழ் மக்கள் வாழும் பிரதேசமா? கல்முனையில் மக்கள் எதிர்ப்பு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
95Shares

கல்முனை மாநகரசபையினர் சாய்ந்தமருது கல்முனைக்குடி முஸ்லிம் பிரதேசங்களில் சேகரித்த குப்பைகளை கல்முனையில் தமிழர் செறிந்து வாழும் கல்முனை 2ஆம் பிரிவில் கொட்டியதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(09) நண்பகல் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை 3ஆம் பிரிவிலுள்ள கண்ணகை அம்மனாலயத்திற்கருகேயுள்ள மக்கள் வாழும் பிரதேசத்தில் இன்றைய தினம் மாநகரசபை லொறிகள் குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்துள்ளது.

மக்கள் எதிர்ப்புத்தெரிவித்தும் சுமார் 50 லோட் குப்பைகளை கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் பிரபல சமூக சேவையாளர் சந்திரசேகரம் ராஜன் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மாகநரசபை நிருவாகத்திற்கு எதிராக கோசமிட்டுள்ளனர்.

கல்மனை மாநகர ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் விளைவு விபரீதமாகும் என கடுமையாக எச்சரித்துள்ளனர்.

பின்னர் கொட்டிய குப்பைகளை மீள ஏற்றுமாறு ஆணையாளர் தொழிலாளிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து குப்பைகள் மீள ஏற்றப்பட்டன.

அப்போது மாநகரசபை பொறியியலாளர் எஸ்.சர்வானந்தா மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் ஆகியோரும் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்

இது திட்டமிட்டு மாகரசபை தமிழ் முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும் சதியாகவே பார்க்கின்றேன்.

இல்லாவிட்டால் டெங்கு சுத்தப்படுத்தல் என்று சாய்ந்தமருது கல்முனைக்குடி முஸ்லிம் பிரதேசங்களில் சேகரித்த குப்பைகளைக் கொண்டு தமிழர்வாழும் பிரதேசத்தில் கொட்டலாமா?

ஒரு பக்கம் டெங்குவை நீக்கி மற்றப்பக்கம் டெங்குவை ஏற்படுத்துவதா? இது தானா மாநகரசபையின் நீதியான நிருவாகம்? இதற்கு தானா புதிய கல்முனை நகர அபிவிருத்தித்திட்டத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்?

இன விரோத செயற்பாடுகளையும் இனவிரிசலையும் ஏற்படுத்த முனைகின்றார்கள்.

குப்பைகள் ஏற்றிவந்த லொறிகள் இன்னும் அங்கு நின்றிருந்தால் மக்களைக்கட்டுப்படுத்த முடியாமல்போயிருக்கும். இச்சம்பவம் பற்றி நாளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவிக்கவுள்ளேன். என கூறியுள்ளார்.

சமுகசேவையளர் சந்திரசேகரம் ராஜன் தெவிக்கையில் கல்முனை மாகர ஆணையாளர் ஒரு அரச உத்தியோஸ்தரல்ல அவரொரு அரசியல்வாதி போல் செயற்படுகின்றார்.

அவர் கல்முனையில் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் தமிழ்மக்களுக்கெதிராகவே செய்கின்றார்.

குப்பை அள்ளுவது தொடக்கம் தண்ணீர் வழங்குவது வரை அத்தனையிலும் தமிழ் மக்களை புறக்கணித்தே செயற்படுவருகின்றார்.என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments