மலையக மக்களுக்கு காணி உறுதிப்பத்திரத்துடன் 7 பேர்ச்சஸ் காணி

Report Print Ajith Ajith in சமூகம்
28Shares

பெருந்தோட்ட தொழிலாள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரத்துடன் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படவுள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே இந்தத் தகவலை வெளியிட்ட அமைச்சர் திகாம்பரம், மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தேசிய அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்ச்சஸ் காணியுடன் தனி வீடு திட்டத்தினை ஆரம்பித்து இன்று நடைமுறைபடுத்தி வருகின்றோம்.

பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம் வாழுகின்ற லயன் அறைகளில் இருந்து 7 பேர்ச்சஸ் காணித் துண்டினை தெளிவான காணியுறுதியோடு வழங்குகின்ற முன்மொழிவு முக்கியமானதாகும்.

தோட்டங்களுக்கு 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிலம் மற்றும் ஏனைய வசதிகள் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்க தேவையான திட்டங்கள் அறிவிக்கப்படுமென எதிர்ப்பார்க்கின்றேன்.

வரவு-செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் முன்மொழிவில் முதற் கட்டமாக ஒரு மில்லியன் ரூபா பெறுமதியில் 10 ஆயிரம் வீடுகளை 2017 ஆம் ஆண்டு நிர்மானிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Comments