கிரான் விவசாயிகள் குழப்பம்! இரண்டாவது முறையாகவும் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

Report Print Reeron Reeron in சமூகம்
102Shares

மட்டக்களப்பு கிரான் கமலநல சேவைக்குப்பட்ட மெய்யாங்கல் கண்டத்திற்குரிய பொதுக்குழு கூட்டத்திற்காக அனைத்து அங்கத்தவர்களையும் அழைத்தபோது ஒரு வித குழப்ப நிலை உருவாகியுள்ளது.

இன்றைய தினம் குறித்த பிரிவுக்குட்பட்ட விவசாய கண்டத்திற்குரிய விவசாயிகள் உட்பட அனைத்து அங்கத்தவர்களையும் அழைத்தபோது குழப்பம் ஏற்பட்டதால் குறித்த கூட்டம் ஒத்திவைக்கபட்டுள்ளது.

குறித்த மெய்யாங்கல் விவசாய கண்டனத்திற்குரிய அமைப்பின் கடந்த கால நிர்வாக உறுப்பினர்களால் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் தற்போதைய புதிய நிர்வாக உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

மெய்யாங்கல் கண்டனத்திற்குரிய நிர்வாக உறுப்பினர்களின் தெரிவுக்குழுக் கூட்டத்திற்கான தீர்வாக எதிர்வரும் 03ஆம் திகதி பொதுகூட்டத்திற்கு அழைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என பொதுமக்கள் மத்தியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிரான் கமல சேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கோபாலப்பிள்ளை ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிரான் கமல சேவை நிலையத்திற்குட்பட்ட மெய்யாங்கல் கண்டனத்திற்குரிய பொதுகூட்டம் கடந்த 02ஆம் திகதி கிரான் ரெஜி மண்டபத்தில் நடைபெறயிருந்தபோது அங்கும் விவசாய அமைப்புகளுக்கிடையே ஒருவித குழப்ப நிலை உருவாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பொதுக்கூட்டம் இன்றைய தினம் நடைபெற இருந்த நிலையில் இன்றைய தினமும் விவசாய அமைப்புக்களுக்கிடையில் ஒருவித குழப்ப நிலை உருவாக விசாய கண்டனத்திற்காக பொதுக்கூட்டம் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments