73 வயதில் O/L எழுதிய பெண்மணி!

Report Print Steephen Steephen in சமூகம்
868Shares

இந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான பெண்மணி ஒருவர் தோற்றியுள்ளார்.

மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண்மணி சாதார தரப்பரீட்சையில் தகவல் தொழிற்நுட்ப பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார்.

மாத்தறை இல்மா கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்யாணி, காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்வது தனது நோக்கம் எனக் கூறியுள்ளார்.

அடுத்த வருட சாதாரண தரப் பரீட்சையில் இலத்திரனியல் மற்றும் இந்தி மொழி ஆகிய பாடங்களுக்கான பரீட்சையில் தோற்ற உள்ளதாக கல்யாணி குறிப்பிட்டுள்ளார்.

தொழிலுக்கான தான் பரீட்சை எழுதவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments