மூன்று வீடுகளில் கைவரிசையை காட்டிய திருடர்கள்

Report Print Kumar in சமூகம்
241Shares

மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் உள்ள இரண்டு வீடுகள் மற்றும் மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றும் நேற்று(08) இரவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு வீடுகள் உடைக்கப்பட்டு அதில் ஒரு வீட்டில் ஒரு பவுன் தங்க சங்கிலியும் அப்பகுதியில் உள்ள மற்றுமொரு வீட்டில் 13 பவுன் தங்க நகைகளும் மற்றும் வீட்டின் உரிமையாளரின் வங்கி கணக்கின் ஏ.ரி.எம்.அட்டை கொள்ளையிடப்பட்டு வங்கி இருப்பில் இருந்த 38.000 ஆயிரம் ரூபா பணமும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2,40,000 ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்றதடுப்புவியல் பொறுப்பதிகாரி கே .ரவிச்சந்திரன் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் எவரும் வீட்டில் இல்லாத நிலையிலே இந்த வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments