நீதவான் கணேசராஜா முன்னிலையில் இடம் பெற்ற விழிப்புணர்வு குழு கூட்டம்

Report Print Reeron Reeron in சமூகம்
99Shares

மட்டக்களப்பு பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக சமூக மட்ட விழிப்புணர்வு குழுக்களை அமைப்பதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று(08) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு சமுதாய சீர் திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு பிரதேசங்களில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது உடனடி, சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக சமூக நலன் விரும்பிகளால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கும் குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இதற்கமைய மட்டக்களப்பில் இயங்குகின்ற சமுதாய சீர்திருத்த பிரிவு சிறுவர் நன்னடத்தை பிரிவு , சட்ட உதவி ஆணைக்குழு , சூர்யா பெண்கள் அமைப்பு , மனித உரிமைகள் ஆணைக்குழு , மத்தியஸ்த சபை தவிசாளர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட்ட உத்தியோகத்தர்கள் முன்னிலையிலும்,

கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் , பெண்கள் அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர்கள் , விமோச்சனா இல்லம் , லயன்ஸ் கழகம் ,யுனிசெப் ஆகிய சமூக நல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னிலையிலும் சமூக மட்ட விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர் .

இதேவேளை நடைபெற்ற சமூக மட்ட விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள் நியமித்தல் நிகழ்வின் போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கருத்து தெரிவிக்கையில் நீதி துறையுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள மற்றும் தொடர்பினை பேணல், எவ்வாறான வழிகளில் தகவல்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது என்பது தொடர்பாகவும்

சகல தரப்பினர்களிடமும் , சமூகங்களிடமும் பெறப்படுகின்ற விடயங்கள், குற்றம் இழைக்கப்படுகின்றவர்களுக்கான தண்டனை எவ்வாறு அமைய வேண்டும் போன்ற விடயங்களும் ஆலோசனைகளும் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டது.

Comments