அனைத்து மதங்களும் வழிகாட்டுவதற்காகவே உள்ளது - அருட்தந்தை லெஸ்லி ஜெயக்காந்தன்

Report Print Kumar in சமூகம்
46Shares

அனைத்து சமயங்களும் வழிகாட்டுவதற்காகவே உள்ளது. சிறந்த பாதையில் நாங்கள் செல்லவேண்டும் என்பதற்காகவே அது வழிகாட்டுகின்றது என அருட்தந்தை லெஸ்லி ஜெயக்காந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஒளிவிழா நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் இன்று( 9) காலை மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு பயனியர் வீதி, மதர்ஸ் கெயார் முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கிறிஸ்த பாடல்களுக்கான நாட்டிய நிகழ்வுகள்,கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும் ஒளிவிழாவினை சிறப்பிக்கும் வகையில் நத்தார் செய்தியை அருட்தந்தை லெஸ்லி ஜெயக்குமார் வழங்கியதுடன் நத்தார் தாத்தா வருகைதந்து ஆடிப்பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

இதன்போது ஓய்வுபெற்றுச்செல்லும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் கே.மோகன்பிறேம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை லெஸ்லி ஜெயக்குமார்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,போதனாசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Comments