காணாமல் போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Report Print Suman Suman in சமூகம்
126Shares

கடந்த மூன்று நாட்களாக காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த 80 வயதான இராசரத்தினம் என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு முன்பக்கமாக இருக்கும் வீட்டின் பாழடைந்த கிணற்றில் இருந்து இன்று(09) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தனியாக வசித்து வந்த இவரை காணவில்லை என கிராம வாசிகளால் தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த கிணற்றில் சடலமாக மிதப்பதனை அவதானித்த கிராம மக்கள் கிளிநொச்சிப் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் பொலிஸார் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிசார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை குறித்த சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

அத்துடன் குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போய் மூன்று நாட்களான நிலையில் அவரது சடலத்தினைப் பார்க்கும் பொழுது இறந்து ஒரு நாட்களே ஆன சடலம் போன்று உள்ளதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த வயோதிபருற்கு ஒரு மகளும் ஒருமகனும் இருப்பதாகவும் மகள் புலம்பெயர் நாட்டில் இருப்பதாகவும் மகனும் வயோதிபரது மனைவியும் வெளி மாவட்டம் ஒன்றில் இருப்பதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த நபரது மரணம் தொடர்பில் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ள போதும் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் அக்கறை எடுத்துக் கொள்ளாதது தமது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பொது மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Comments