வவுனியாவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்து மீறி வீட்டினுள் நுழைந்த சில நபர்கள் வீட்டிலுள்ள, ஜன்னல், கதவு உட்பட வீட்டிலுள்ள பெறுமதிமிக்க பொருட்களை உடைத்தெறிந்துள்ளனர்.

மேலும் ஊடகவியலாளரை போத்தலினால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தனக்கு தெரியாது என குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இதுவரை சந்தேக நபர்கள் இனங்காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments