மட்டக்களப்பில் அகரம் சமூக அமைப்பினால் விருந்து எனும் பல்சுவை இதழ் வெளியீடு

Report Print Rusath in சமூகம்
51Shares

பாண்டிருப்பு அகரம் சமூக அமைப்பு ஊடாக “விருந்து” எனும் சிற்றிதழ் நேற்று(06) மாலை கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அகரம் அமைப்பின் தலைவரும் இதழின் ஆசிரியருமான செ.துஷியந்தன் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது.

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மு.சபாரெத்தினம் குருக்களின் ஆசியுடன் எழுத்தாளர் அரசரெத்தினம் நூலின் வெளியீட்டுரையையும் நூலின் நயவுரையினை சட்டத்தரணி பாடும் மீன் சு.ஸ்ரீந்தராஜாவும் நிகழ்த்தினர்.

இதழாசிரியர் செ.துஷியந்தனினால் சஞ்சிகையின் முதல் பிரதியை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராஜா ஆகியோருக்கு இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனால் சஞ்சிகையின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா, கல்துனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் க.லவநாதன், சட்டத்தரணி பாடும் மீன் சு.ஸ்ரீந்தராஜா, மூத்த கவிஞர் மு.சடாட்சரன், எழுத்தாளர் அரசரெத்தினம், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இதன் போது கலந்து கொண்டனர்.


Comments