கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கினிகத்தேனை – அம்பகமுவ பிரதேச பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடு ஒன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இவர்கள் நித்திரையில் இருந்ததாகவும், பிறகு தீப்பற்றியுள்ளதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், ஆடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.