ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி ஹட்டனில் பிரித் பாராயணம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
27Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும், மழை வேண்டியும் பிரித் பாராயணம் ஒன்று நேற்று இரவு ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ட்பிள்யூ.ஜே. ரணசிங்க மற்றும் தர்மபிரியவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பிரித் பாராயணத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

மத்திய மாகாணத்தில் நிலவும் வறட்சியன காலநிலையை அடுத்து ஆறுகள் ஓடைகள் நீரூற்றுகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவை வற்றிப் போய் உள்ளன.

எனவே மழை வேண்டியும் இப்பிராயணத்தில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் பிரித்பிராயணத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்ட புனித நீர், நீர்தேக்கங்களிலும் நீரேந்தும் பிரதேசங்களிலும் தெளிக்கப்பட்டன.

சுமார் 16 பௌத்த மதகுருமார்கள் கலந்து கொண்ட இப்பிரித்பிராயத்தினை நடத்தி வைத்தனர்.

இந்நிகழ்விற்கு ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பதில் செயலாயர் பிரியதர்ஷினி, உட்பட ஊழியர்கள் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

Comments