வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வீடு கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் மீள் குடியேறியுள்ள கிராம மக்கள் இன்று(07) காலை 9.30 மணியளவில் ஒன்றிணைந்து தமக்கான வீட்டினைப் பெற்றுத் தருமாறு கோரி பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்விடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான கே.கே.மஸ்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி வடமாகாணத்திற்கு கிடைக்கவுள்ள 65,000 வீடுகளில் பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்ததுடன் வவுனியா பிரதேச செயலாளரிடம் ஒரு சிலரை அழைத்துக் கொண்டு சென்றும் கலந்துரையாடப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “வெயிலில் காய்ந்து மழையில் நனைகின்றோம்”, “காட்டாதே காட்டாதே பாராபட்சம் காட்டாதே” போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 193 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்பகுதிக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் இப்பகுதி மக்களைச் சந்தித்து தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments