மட்டக்களப்பில் புதிய சமூக அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ஆரம்ப கூட்டம் நாளை(08) பிற்பகல் 3 மணியளவில் புகையிரத வீதியில் அமைந்துள்ள இணையம் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், வர்த்தகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அமைப்பு அரசியல், சமூக, பொருளாதர, கல்வி, அபிவிருத்தி தொடர்பில் பொது வெளியில் பணியாற்றுவதற்கான அமைப்பு ஒன்று எனத் தெரிவிக்கப்படுகின்றது.