தாயின் விடா முயற்சியால் மகன் மாவட்டத்தில் நான்காம் இடம்!

Report Print Viyu in சமூகம்
2747Shares

இணையத்தளம் மூலம் இன்று(7) வெளியாகியுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில் தோற்றிய கல்குடா வலய வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவன் ஸ்ரீமோகன் ஸ்ரீலக்சன் மூன்று ஏ தர சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க உப தலைவர் வ.பிரியராஜ் கூறுகையில், தந்தையை இழந்தும் வறிய நிலையில் தாய் மற்றும் சகோதரர்களின் விடா முயற்சியாலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பாலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த மாணவன் தனது குடும்பத்திற்கும் கல்விச் சமூகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் பெருமையைச் சேர்த்திருக்கின்றார். அதற்காகப் பாராட்டுகின்றேன் எனத் தெரிவித்தார்.

இம்மாணவனின் தாயார் வே.உமாதேவி கருத்துக் கூறுகையில், எனது கணவர் மகன் ஐந்தாம் தரம் கல்வி பயிலும் போதே கடந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இறந்து விட்டார். அதனால் எனது மகனை படிப்பிப்பதற்காக பெரும் கஷ்டப்பட்டேன். எனது மகனின் இச்சாதனையை காண்பதற்கு எனது கணவர் இப்போது இல்லை என மன வேதனையுடன் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

Comments