விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

Report Print Thirumal Thirumal in சமூகம்
15Shares

நுவரெலியாவில் பதிவு செய்யப்பட்ட 49 விளையாட்டு கழகங்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.அருள்சாமி, அனுஷியா சிவராஜா, நுவரெலியா பிரதேச சபை முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

தோட்டப்பகுதி இளைஞர் கழகங்களுக்கான கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்கள் ஆலயங்களுக்கான கதிரைகள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Comments