மட்டக்களப்பு ஆரையம்பதியிலே 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சந்திரகுமார் சர்மிலா மூன்று பாடங்களிலும் A தரச் சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது நிலையையும் அகில இலங்கை ரீதியாக 51 வது நிலையையும் பெற்று தான் கல்வி கற்ற ஆரையம்பதி இராம கிருஷ்ணா மகா வித்தியாலயத்திற்கும் தமது மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பொருளாதார நிலையில் பின் தங்கிய குடும்ப பின்னணியைக் கொண்ட இந்த மாணவியின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் பக்க பலமாய் இவரது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இருந்துள்ளனர்.
நகர பாடசாலைகளைத் தேடிச் சென்று கல்வி கற்கும் வழக்கமுள்ள இந்தப் பிரதேசத்தில் கிராம பாடசாலையிலே பயின்று மாவட்டத்தில் முன்னணியில் சித்தி பெற்றுள்ள இந்த மாணவிக்கு பாடசாலையின் அதிபர் பாராட்டினைத் தெரிவித்தார்.