மனிதனின் நல்லெண்ணங்களும், மனிதனின் சுகாதார பழக்க வழக்கங்களுமே அவன் நோயிலிருந்து விடுபட்டு வாழ முக்கிய காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்களுக்கான விழிப்புணர்பு கருத்தரங்கில் நோய்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே வைத்திய சங்க அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் இன்று நோயில்லாத மனிதர்களை காணவே முடியாது. சுகாதார பழக்க வழக்கமின்மை மற்றும் உணவுத்தெரிவு போன்றவற்றின் மூலம் அடிக்கடி நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
அவர்களுக்கான விசேட விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாகவே குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களிடத்தில் உணவுப்பழக்க வழக்கங்கள் தொடர்பான எச்சரிக்கையை எற்படுத்த வேண்டிய அவசியம் எம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
எதிர்வரும் காலங்களில் கொழும்பு, கிளிநொச்சி,வவுனியா, பதுளை, இரத்தினபுரி உட்பட்ட மாவட்டங்களில் விசேட செயற் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நோயாளர்களுக்கான விசேட சிகிச்சை பிரிவுகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இதனூடாக பலரும் பயன்பெற்றுக் கொள்ள முடியும்.
ஜனவரி மாதத்தை நோயற்ற சுகாதாரமிக்க மாதமாக மாற்றுவதே எமது நோக்கம். இது தொடர்பில் விரைவில் புதிய மாற்றம் கொண்டு வருவோம் என மேலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.