நீ உருப்பட மாட்டாய் என்றார் அதிபர் அதுவே எனக்கு சவாலக அமைந்தது என சாதனைப் படைத்த மாணவன் ஒருவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றவர் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரனே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவர் கிளிநொச்சி உருததிரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் ஒரு கூலித் தொழிலாளியின் மகன்.
இவர் இன்று ஊடகவியலாளர்களின் செவ்விக்கு கருத்து தெரிவித்த போது தான் ஆரம்பகல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவர்களை ஏளனமாகவே பார்ப்பது வழமை. எள்ளுக்காட்டில் உள்ளவர்கள் படிக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் கூறுவார்கள்.
குறிப்பு -
இங்கு ஒரு மாணவனை அதிபர் கண்டித்தார் என்பது சாதாரணமான விடயம். ஒருவரை கண்டிக்கின்றார்கள் என்றால் அவர்கள் உருப்படாமல் போவதற்கு அல்ல. அவர்கள் இனிமேலாவது நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவே. அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள், சகோதரர்கள் என அனைவருமே மாணவர்களை கண்டிப்பார்கள்.
நமக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே இவர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அந்த வகையில் யாரேனும் கண்டித்து திட்டினால் மனம் உடைந்து போகாமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும்.
அதற்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார். அதேபோல் இந்த மாணவர்களை சாதிக்கத்தூண்டிய அதிபரும் இதில் வெற்றிபெற்றிருக்கின்றார் என்றால் மிகையாகாது.