கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியுற்றமைக்கான காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறத் தவறியமையே அவர் தோல்வியைச் சந்தித்தமைக்கான பிரதான காரணமாகும் என சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
இதனாலேயே முஸ்லிம் மக்களிடத்தில் இருந்து மஹிந்த 99 சதவீத வாக்குகளை பெறத் தவறியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளும் மஹிந்தவின் தோல்விக்கு முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.