இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தினது மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று(07) மாலை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
நாளை நடைபெறவுள்ள “நிரந்தர யுகம் - மூன்றாவது ஆண்டு ஆரம்பம்” நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் நோக்கில் சந்திபாபு நாயுடு இலங்கை வரவுள்ளார்.
இந்த நிகழ்வின் பின்னர் அவர் நாளை ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பசுமை பல்கலைக் கழகத்தையும் பார்வையிட உள்ளதாக ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளது.